


சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர்,மாடம்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் ஷோபனா (வயது-36) இவரது இரண்டு மகன்களும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளியில் இருந்து மகன்களை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சாலையில் அதி வேகமாக தரங்கெட்டு ஆட்டோவை ஓட்டி வந்த நபர் ஷோபனா மீது மோதியது,அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த ஷோபனா மீது ஆட்டோ ஏறி இறங்கியது இதில் ஷோபனா படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அதிவேகமாக ஓட்டி தப்பிச்செல்ல முயன்ற போது பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்,அப்போது ஆட்டோவை ஒரு சிறுவன் ஓட்ட இரண்டு சிறுவர்கள் பின்னால் அமர்ந்திருப்பது தெரியவந்தது
அதன் பின்னர் காயத்துடன் இருந்த ஷோபனாவை மீட்ட பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்,அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது.

ஆட்டோ ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய சிறுவன் உட்பட மூன்று பேரை பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்,ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது அதி வேகமாக வந்த ஆட்டோ மோதி பெண் மீது ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

