நமது நாட்டில் அரசியல் கலாசாரம் சிறப்பாக மாறிவரும் நிலையில், அரசியல் வல்லுநர்கள், அரசியல் நோக்கர்கள் இனியும் பழைய பல்லவியையே பாடாமல், புதிய கண்ணோட்டத்துடன் சிந்திக்க பழக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
நான்கு மாநில சட்டப்பேரவைத் தோதல்களில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து தில்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் தொண்டா்களைச் சந்தித்து பிரதமா் மோடி, வாக்காளர்களுக்கும், கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பின்னர் அவர் பேசுகையில், நான்கு மாநில சட்டப்பேரவைத் தோதல்களில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடா்ந்து, நாட்டில் அரசியல் கலாசாரம் மாறி வருவதை தோதல் முடிவுகள் காட்டுகின்றன.
சாதிய அடிப்படையிலான செல்பாடுகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து, வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்திருப்பதாக பெருமிதத்துடன் மோடி தெரிவித்தார்.
பாஜக மீதான அன்பை மக்கள் மேலும் வலுப்படுத்தியுள்ளனர். கோவாவில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில், அனைத்து கருத்துக் கணிப்புகளும் தவறு என நிரூபிக்கப்பட்டு பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாஜக வெற்றி பெற்ற இடங்களும் அதிகரித்துள்ளன.
உத்தரகண்டில் முதன்முறையாக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி பாஜக புதிய வரலாற்றை எழுதியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள நற்சான்று தான் 4 மாநில தேர்தல் முடிவுகள் என்ற பிரதமர் மோடி, ஏழைகளின் உரிமைகள் நிலைநாட்டப்படுகின்றன. கடை கோடியில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசின் திட்டம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதுதான் பாஜக இலக்கு என்று மோடி, மாநிலங்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்று கூறினார்.
மேலும், நமது நாட்டில் அரசியல் கலாசாரம் சிறப்பாக மாறிவரும் நிலையில், அரசியல் வல்லுநர்கள், அரசியல் நோக்கர்கள் இனியும் பழைய பல்லவியையே பாடாமல், புதிய கண்ணோட்டத்துடன் சிந்திக்க பழக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, பஞ்சாபின் நலனுக்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என மோடி உறுதியளித்தார்.