தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் உடல்நிலை பாதிப்பு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தன்னுடைய இடது கையில் சற்று பிரச்சனை இருப்பதாக கூறியதைத் தொடர்ந்து அவர் ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கட்சியினர் மற்றும் மாநில மக்கள் கவலைப்பட வேண்டாம் என அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.