மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் பாவத்தை செய்துவிட்டு பழியை என்மீது போடுகிறார்கள் என்றார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் … தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சிலர் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. எனவே அதை பற்றி கருத்து சொல்ல விருப்பம் இல்லை. ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? என்று நாட்டு மக்களுக்கு தெரியும். தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும். பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள். அ.தி.மு.க. உறுதியாக இணைய வேண்டும் என்பதே என் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, பாஸ்கரன், முருகேசன், ஸ்ரீராம் ரங்கராஜன், வேல்முருகன், ஒத்தக்கடை பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.