• Thu. Feb 13th, 2025

இடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை..!!

ByA.Tamilselvan

Jan 21, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை,அதேபோல யாருக்கும் ஆதரவு இல்லை என அன்புமணிராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது. 2021 தேர்தலில் இந்த தொகுதி அதிமுக கூட்டணி சார்பில், தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தமாகா சார்பில் போட்டியிட்ட, கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தோல்வியடைந்தார். இந்நிலையில் இத்தொகுதியில் கூட்டணிக் கட்சியான அதிமுக போட்டியிட சம்மதிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு எம்.எல்.ஏ. காலமானால், அவர் சார்ந்த கட்சிக்கே அந்த இடத்தை ஒதுக்கிவிட வேண்டும் என்பதே பாமகவின் கொள்கை என கூறிய அன்புமணி, இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப்பணம், நேரத்தை வீணடிப்பவை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.