எல்லா மொழிகளிலும் சீரியல் என்றால் பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு தான். அதிலும் சீரியல் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றி வாகை சூடிவரும் பாக்யலட்சுமி தொடரில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் சுசித்ரா. கன்னட நடிகையான இவர் தமிழில் நடிக்கும் முதல் சிரியல் இதுவாகும். இதில் அவர் பாக்யலட்சுமி என்கிற லீட் ரோலில் நடித்து வருகிறார்.
சில நாட்களாகவே இந்த சீரியல் விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருப்பதனால் இதன் டிஆர்பி-யில் உச்சத்தில் உள்ளது. டிஆர்பி-யில் டாப் 3 பட்டியலில் பாக்யலட்சுமி சீரியல் இடம்பெற்றும் உள்ளது. இதில் பாக்யலட்சுமியாக நடிக்கும் சுசித்ராவின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. இந்நிலையில், நடிகை சுசித்ரா தற்போது சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் புதிய படம் ஒன்றில் பிரபுதேவா உடன் சேர்ந்து நடிக்கிறார். இப்படத்தில் அவர் பிரபுதேவாவுக்கு அம்மாவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். பாக்யலட்சுமி சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து அசத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அவர் பிரபுதேவா உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.