

ஸ்ரீமதி பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறுபாடுகள் உள்ளதாக அவரது வழக்கீல் காசிவிசுவநாதன் பேட்டியளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.தற்போது தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் 14.7.2022 வெளிவந்த முதல் கட்ட பிரேத பரிசோதனைக்கும் 19ம் தேதி நடைபெற்ற பிரதபரிசோதனைக்கும் வேறுபாடுகள் இருப்பதாக ஸ்ரீமதியின் வக்கீல் காசி விசுவநாதன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் வக்கீல் காசி விசுவநாதன் கூறும் போது :- கடந்த மாதம் 14-ந் தேதி நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கும், 19-ந் தேதி அன்று நடைபெற்ற பிரேத பரிசோதனை முடிவுகளில் சொல்லாத ஒரு சில தடயங்களை 2-வது பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் உடலில் 2 காயங்கள் மட்டும் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முதல் பரிசோதனையில் எடுக்கப்படாத சோதனைகளை 2வது பரிசோதனையில் கூடுதலாக சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் 2-வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
