தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் போடியில் பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் இளநீர், தர்பூசணி பழம், மோர் ஆகியவை கொண்ட தண்ணீர்பந்தலை மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்.
தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல், மோர் பந்தல்கள் அமைத்து அவர்களது தாகத்தை தீர்க்க வேண்டும் என உத்தரவிட்டார். முதல்வர் ஸ்டாலின் ஆணைக் இணங்க தேனி வடக்கு மாவட்டதிமுக சார்பில் போடி பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குடி நீர் மோர், இளநீர் தர்பூசணிபழங்கள், அடங்கிய தண்ணீர் பந்தலை போடி நகர் மன்ற தலைவர் திருமதி ராஜராஜேஸ்வரி சங்கர் முன்னிலையில் மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வெங்கடோசன், ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், ஏராளமான திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.