• Sat. Apr 20th, 2024

தேனி நகராட்சி தலைவர்
பதவி: அடிச்சது காங்கிரசுக்கு ‘லக்கு’

தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளதால், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் விரக்தியடைந்து காணப்படுகின்றனர்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற 33 பேரும் நேற்று (மார்ச் 2) காலையில், கவுன்சிலராக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 33 வார்டுகளில், தி.மு.க., -19, அ.தி.மு.க.,-7, அ.ம.மு.க.,-2, காங்., – 2, பா.ஜ., – 1, மற்றும் சுயே., – 2 என வாகை சூடின. களம் கண்ட 5 தம்பதிகளில் ஒரு தம்பதி மட்டுமே ‘வின்னிங்’ ஆனது. தலைவர் பதவி பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டதால் நீயா? நானா? போட்டி தி.மு.க.,- காங்., இடையே ஏற்பட்டது. இதனால் தி.மு.க., கவுன்சிலர்கள் விரக்தியடைந்தனர். அவர்களை ‘கூல் டவுண்’ படுத்த நேற்று மூணாறு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு சில தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டும் தேனி நகருக்குள் சுற்றித் திரிந்ததை காண முடிந்தது. இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, கட்சி மேலிடத்தில் இருந்து தகவல் வெளியானது. இதனால் தி.மு.க., வினரின் தலைவர் பதவி வெறும் கனவாகிப் போனது.

யார்? இந்த சற்குணம்….. அவரின் பின்னணி என்ன? என்று விசாரித்த போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
22வது வார்டில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தேனி நகரின் பாரம்பரிய மிக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.தியாகராஜன் என்பவரின் மருமகள். சற்குணத்தின் கணவர் ராஜ்குமார். இவர் ஒரு டாக்டர். இவர்களது மகன் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் ஆவார். இவர்கள் அனைவரும் தேனி நகர மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர். எல்லோரிடமும் அன்பாக பழக்கூடியவர்கள். இதன் காரணமாக 22வது வார்டு மக்களிடமிருந்து எளிதாக வெற்றிக் கனியை பெறமுடிந்தது. எது எப்படியோ பலரும் பலவாறு புகழ்ந்தாலும், தனது வார்டு மக்களின் குறைகளை அவர் நிவர்த்தி செய்தாலே போதும்…என்ற மனப்பான்மையில் வார்டு மக்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *