
அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து பெரியக்குளத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் எந்த முடிவாயினும் நானே விளக்கமளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் பின்னடைவை சந்தித்தது. இருதலைமை அதிமுக-வில் இருப்பது காரணம் என்றும், சசிகலா தினகரனை மீண்டும் அதிமுக-வில் இணைத்தல் கட்சி பலமடையும் என்று அதிமுக தேனீ மாவட்ட நிர்வாகிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னிர் செல்வத்தின் பண்ணை வீட்டில் ஓ.பன்னிர் செல்வம் அவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், துணை செயலாளர் முகோடை, ராமர், முன்னால் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் உடனிருந்தார்.
