முன்னாள் மத்திய அமைச்சரும், இரண்டு முறை குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் இருந்தவர் பாரத் சிங் சோலாங்கி. தற்போது பதவியில் இல்லையென்றாலும் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் இவர் இளம்பெண்ணுடன் அறையில் இருந்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தனியார் ஹோடடலில் இளம்பெண் ஒருவருடன் சோலாங்கி தங்கியிருந்துள்ளார்.எப்படியோ இந்த தகவலை அறிந்த அவரது மனைவி, நேராக அந்த ஹோட்டலுக்கு சென்றார். அங்கு அறையை திறந்தபோது கணவரான காங்கிரஸ் மூத்த தலைவர் சோலங்கி, இளம்பெண்ணுடன் இருந்ததை அறிந்து அவரது மனைவி ரேஷ்மா படேல் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அறைக்குள் நுழைந்து சோலாங்கியை அவரது மனைவி தாக்கினார். மேலும் அவருடன் இருந்த இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து விரட்டி விரட்டி தாக்குதல் நடத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரம் ஆளும் பாஜக கட்சிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனையே பிரச்சாரத்தில் ஆயுதமாகவும் பயன்படுத்த உள்ளனர்.