முன்னாள் ஆளுநரும் பாஜகவின் மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து அடைந்தார் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது:.

பாஜக சார்பில் இருக்கும் 67 மாவட்டங்களுக்கும் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இருக்கக்கூடிய மண்டல நிர்வாகிகள் அனைத்து பிரிவு நிர்வாகிகளை பார்த்து அவர்களுடன் ஆலோசனைகளை பகிர்ந்து கட்சியை பலப்படுத்துவதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் பாஜக தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 67 மாவட்டங்கள் என்பது எங்கள் அமைப்பு ரீதியான மாவட்டங்கள். பாரதப் பிரதமரின் சாதனைகளை அந்தந்த ஊர், மாவட்ட மக்களுக்கு எடுத்துச் செல்வது எங்கள் குறிக்கோள். பிரதமரின் சாதனைகளை புத்தகமாக வச்சிட்டு முக்கிய தலைவர்களுக்கு கொண்டு சேர்க்கிறோம்.
சென்னையில் 61% மக்களுக்குத்தான் போக்குவரத்து திட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள். பொது போக்குவரத்திற்கு 61% மக்கள் தான் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜூலையில் பிரதமர் வடபழனி,பூந்தமல்லி காண மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார். ஆளும் கட்சிகள் ஆண்ட கட்சிகள் போக்குவரத்தை கூட சரியாக செய்யாத நேரத்தில் பாரத பிரதமர் மெட்ரோ துவக்கி வைக்க இருக்கிறார்.
மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆட்சியாளர்கள் அறிக்கையை முறையாக சமர்ப்பிக்காததால் தான் வரவில்லை மாவட்டங்களுக்கான புரிதலோடு திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மதுரை விமான நிலையம் தூத்துக்குடி சென்னை திருச்சி விமான நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இந்தியாவிலேயே வந்தே பாரத் ரயில் தமிழகத்திற்கு தான் அதிகமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் எல்லா நலனும் பெற வேண்டும் மக்களும் எல்லா நலனும் பெறுவதற்கு அவர் எல்லா நலனும் பெற வேண்டும்.
எல்லா அமைச்சர்களும் தங்களது துறையின் இருக்கும் பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொண்டு பணியாற்ற வேண்டும். உயர் கல்வித் துறை அமைச்சர் இன்னும் பல பல்கலைக்கழகங்களில் பிரச்சனைகள் உள்ளது. துணை ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும் ஆனால் அவர் பாடத்தை பார்க்காமல் ஆட்டத்தை பார்க்கிறார்.
முதல்வர் திரைப்படத் துறையில் இருந்து வந்தார் என்பது எந்த விதத்திலும் மாற்றமில்லை அவர் அமைதியான முறையில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் ரிலீஸ் போட்டு ஆட்சியைப் பார்க்காமல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள், இது சரி செய்யப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து. உயர்கல்வித்துறை அமைச்சர் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியதை விட்டுவிட்டு பாடிக்கொண்டு ஆடிக்கொண்டு இருக்கிறார். வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள் ஜப்பான் ஜெர்மனி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு இந்தியாவில் வேறு ஒரு மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார் இது என்ன அறிவுரை என்று எனக்கு தெரியவில்லை.
பி எம் ஸ்ரீ திட்டத்தை கேரளா போன்ற மாநிலங்கள் கொண்டு விட்டார்கள். இதில் உள்ள அரசியலை ஒதுக்கி தள்ள வேண்டும் 7500 கோடி பக்கிங் வாய்க்கால் வாய்க்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. கோவத்தை சுத்தப்படுத்துவதற்காக நிதி ஒதுக்குவதாக சொல்லி அவர்களுக்குத்தான் ஒதுக்கி கொண்டார்கள். மத்திய அரசு மாநில அரசிடம் இணக்கமாக செயல்படுகிறது. இங்கு வரும்போது ஆளுநரை சந்தித்து விட்டு தான் வந்தேன் மத்திய அரசு மாநில அரசின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் என உறுதிப்படுத்தி சொன்னார்.

மேகதாது விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு: பாரதிய ஜனதா கட்சி தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. அந்த தண்ணீர் தடுக்கப்படக்கூடாது. மாணிக்க தாகூர் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம் என்று சொல்கிறார்கள் அது மட்டும் பிரச்சனை இல்லை கொள்கை ரீதியாக மேகதாதுவை அமைச்சரவையில் இருந்து கொண்டே எவ்வாறு எதிர்க்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. தமிழக மக்களுக்கு வேண்டிய நீர் ஆதாரம் நிச்சயம் கிடைக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து.
அமோனியா வாய்வு கசிவு குறித்த கேள்விக்கு: அம்மோனியா கசிவனால் 67 பேருக்கு மேல் பால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. கொத்துயிரும் குலை உயிருமாக அவர்களை தூக்கிக் கொண்டு ஓடியது. எங்கெல்லாம் இதுபோல முறைகேடான கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது அவை எல்லாம் உடனே கண்டுபிடித்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பவில்லை என்றால் நடவடிக்கை எடுக்க அரசு முடிவு எடுக்க வேண்டும். இந்த வாய்வு கசிவு குறித்த காரணத்தையும் பார்க்க வேண்டும். இந்த தொழிற்சாலை யார் பின்புலத்தில் இருக்கிறது என பார்க்க வேண்டும் உயிர்கள் போவதை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பது எங்கள் கருத்து.
சமீபத்தில் சிவகாசி பட்டாசு தொழிற்சாலை உயிரிழப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாது. பட்டாசு தொழிற்சாலைக்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் இருக்க வேண்டும். அதேபோல ரசாயனம் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகள் இருக்கும் இடத்தில் அருகில் மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும்.
நான் ஒரு மருத்துவர் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனை வந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று நமக்கு தெரியும் பணக்காரர்கள் லண்டனுக்கு சென்று சிகிச்சை எடுப்பார்கள். அந்த சிகிச்சை நமக்கு கிடைப்பதற்கு எய்ம்ஸ் உதவி செய்கிறது. பாரதப் பிரதமர் வந்த பிறகு தான் எய்ம்ஸ் தமிழகத்திற்கு வந்தது. ஆனால் அந்த எய்ம்சை வைத்து அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள். அது உருவாவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் ஆனால் அது ஆரம்பித்தவுடன் எந்த அளவுக்கு மக்களுக்கு பலன் தரும் என்று பார்ப்பீர்கள். எய்ம்ஸ் ராமநாதபுரத்தில் படிக்கும் மாணவர்கள் மதுரைக்கு வந்து விட்டார்கள் எய்ம்ஸில் தான் தங்குகிறார்கள்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் தமிழக அரசின் பதில் குறித்த கேள்விக்கு:
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தை மத பிரச்சனையாக பார்க்காமல் இந்துக்களின் உணர்வாக பார்க்க வேண்டும். சென்ற ஆட்சியில் நடந்த தப்பை நீங்கள் செய்தீர்கள் என்றால் அந்த ஆட்சியில் மக்கள் தண்டிப்பதற்கு காரணம் இந்துக்களை அவர்கள் வெறுத்ததுதான். தமிழக அரசுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. பல்கலைக்கழகங்கள் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை பள்ளிகளில் காலை உணவிற்கு பதிலாக பிஸ்கட் கொடுக்கிறார்கள். இது போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது தீபத்துண் பிரச்சனைக்கு உச்ச நீதிமன்றம் செல்வது எந்த அளவிற்கு வேறுபாடான அரசை நிலைநிறுத்த பார்க்கிறீர்கள் முதல்வர் உடனடியாக இதில் தலையிட வேண்டும்.
பாஜக திமுக ரகசிய உறவு அமைச்சர் நிர்மல் குமார் கூறியது குறித்த கேள்விக்கு:
எங்களுக்கு எந்த ரகசியமும் இல்லை அவர்கள் யாரிடம் ரகசியம் வைத்திருக்கிறார்கள் என்று தெரியாது. நிர்மல் குமார் முதலில் மின்வெட்டை சரி செய்யட்டும். அவர் யாருடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு மின்வெட்டு நடக்கிறது என்று தெரியவில்லை யாருடன் உறவு வைத்து கோப்புகள் காணாமல் போகிறது என்று தெரியவில்லை யார் உறவு வைத்துக்கொண்டு சிபிசிஐடி ஏற்பாடு ஒரு வாரத்திற்கு பிறகு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காதது குறித்த கேள்விக்கு: அதை ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.




