நேட்டோ அமைப்பில் சேர்வதை எதிர்த்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது.
உலக நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தும், பொருளாதார தடைகளை விதித்தபோதிலும் போர் இறுதி முடிவை எட்டவில்லை.
இதனால் உக்ரைனில் உள்ள வெளிநாட்டு மக்கள் அவரவர் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். உக்ரைனைச் சேர்ந்த மக்கள், அண்டை நாடுகளான போலாந்து, ஸ்லோவேகியா, மால்டோவா, ஹங்கேரி, பெலாரஸ் உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து போலந்துக்கு அகதியாக செல்லும் சிறுவன் ஒருவன் அழுதுக்கொண்டே யாருமில்லாமல் தன்னந்தனியாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. மெடிஸ்கா கிராமத்தில் இந்த வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது. எல்லையை கடந்து செல்லும் அந்தச் சிறுவன் அழுதுகொண்டே தனது பொருட்கள் அடங்கிய பையை போலந்திற்குள் இழுத்துச் செல்வதைப் பார்த்து கண்ணீர் விட்டதாக வீடியோவை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் மட்டும் தனியாக செல்கிறான். அவனுடைய குடும்பத்தினர் எங்கே என்பது குறித்த தகவல் தெரியவில்லை. அந்த சிறுவன் தனியாக தான் உக்ரைனை விட்டு வெளியேறி உள்ளனா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் சிறுவன், தனது குடும்பத்தினர் இன்றி தனியாகத் தான் சென்றதாக கூறுகின்றனர். உக்ரைனில் நடக்கும் போரில் இதுவரை 38 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், 71 குழந்தைகள் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் நாடாளுமன்ற மனித உரிமைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ‘நேட்டோவில் உக்ரைனை இணைப்பது குறித்த விவகாரத்தில் எப்போதோ எனக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. உக்ரைனை சேர்த்துக் கொள்ள நேட்டோ தயாராக இல்லை என தெரிந்தப் பிறகு, அந்த அமைப்பில் இணையும் விருப்பத்தை கைவிட்டு விட்டேன். நேட்டோ எங்களை ஏற்கத் தயாராக இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
சர்ச்சைக்குரிய விவகாரங்கள், ரஷ்யாவுடானான மோதல் ஆகியவைக்கு நேட்டோ கூட்டணி பயப்படுகிறது. மண்டியிட்டு யாசகம் பெறும் நாட்டின் அதிபராக இருக்க நான் விரும்பவில்லை. ஆனால், நாங்கள் கடைசி வரை போராடப் போகிறோம். எந்த சூழலிலும் ரஷ்யாவுக்கு அடிபணியப் போவதில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் இந்தப் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க்ப்படுகிறது.
Excruciating pic.twitter.com/PIutGEIN0F
— Josh Campbell (@joshscampbell) March 7, 2022
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]