• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று மாலை 5 மணி வரைதான் டைம்.

ByA.Tamilselvan

Jul 6, 2022

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.
தமிழகம் முழுவதும், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 13 ஆயிரத்து 331 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றை, தற்காலிக ஆசிரியர் நியமனம் மூலம் நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் தகுதி வாய்ந்தவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி முதல் மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.