கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட தமிழக முழுவதும் பேருந்துகளில் முககவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டில் பாதிப்பு அதிகமாவதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது .
இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாநகரப் பஸ்களில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்திருப்பதை நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். போக்குவரத்துப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.பொதுஇடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.