• Thu. Apr 25th, 2024

சோதனை அதிமுகவிற்கு புதிதல்ல.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

Byகாயத்ரி

Feb 28, 2022

சோதனை என்பது அதிமுகவிற்கு புதிதல்ல என்றும் மீண்டும் அதிமுக வெற்றிநடை போடும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அதிமுக.,வினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் விருதுநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி கட்டிக்காத்த இந்த இயக்கத்தை இன்று கழக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கொடுத்த அறிக்கையின்படி தமிழகம் முழுவதிலும் திமுக அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. பொய் வழக்கு போடும் திமுக அரசின் ஆட்சியை கண்டிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த அடிப்படையில் விருதுநகர் மேற்கு மாவட்டம் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. நாம் அத்தனை பேரும் அண்ணா திமுகவின் விசுவாசிகள். இந்த இயக்கத்தை பாதுகாக்க புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள். சோதனை என்பது அதிமுகவுக்கு புதிதல்ல. மீண்டும் அதிமுக மீண்டும் வெற்றிநடை போடும் புரட்சித்தலைவி அம்மா இருந்த காலத்திலேயே பென்னகாரம் சட்ட மன்ற இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்து இருக்கின்றோம். திருமங்கலம் இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்திருக்கின்றோம். நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கின்றோம். புரட்சித்தலைவி அம்மா காலத்திலேயே மிருக பலத்துடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்னோம். 1996ல் மிகப்பெரிய தோல்வியை கழகம் சந்தித்தது. அப்போது 4 சட்டமன்ற உறுப்பினர்கள்தான் வெற்றி பெற்றார்கள். அதில் இரண்டு பேர் போய் விட்டார்கள். ஆனால் 1998ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கின்ற அளவிற்கு அதிமுக மாபெறும் வெற்றிபெற்றது. பிரதமர் யார் என்பதை நிர்ணயிக்க கூடிய இடத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்தார்கள். அந்த அளவுக்கு நமது வெற்றி இருந்தது. எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தில் தோல்வி என்பது புதிதல்ல. வெற்றி சரித்திரம் படைத்து அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அண்ணா திமுக தொண்டர்கள் தோல்வியை கண்டு என்றும் துவண்டு போனது கிடையாது . வெற்றியை கண்டு மகிழ்ச்சியில் மிதந்து போனதும் கிடையாது. அண்ணா திமுகவிற்கு வெற்றியும் தோல்வியும் சகசம்தான். நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஒரு முடிவு வந்து இருக்கலாம். ஆனால் அடுத்து நடைபெறும் தேர்தல்களில் எல்லாம் அப்படி அமையுமா என்று கூறமுடியாது. எத்தனையோ தேர்தல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 2006இல் மிகப்பெரிய தோல்வியை அதிமுக சந்தித்தது. 2011இல் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெற்றது. அண்ணா திமுகவிற்குதான் பத்து ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டது என்ற பெருமை உண்டு. இன்று தனித்து நின்று இவ்வளவு வாக்குகள் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் அண்ணா திமுக வாக்கு வங்கி அப்படியே உள்ளது யாருக்கும் அதிமுக வாக்குகள் போகவில்லை. அண்ணா திமுக தொண்டர்கள் நிலைகுலையாமல் இருப்பது கண்டு ஆளும் கட்சியினர் திகைத்துப் போயுள்ளனர். அந்த அளவிற்கு ஒரு வலிமையான தொண்டர்கள் இருக்கும் இயக்கம் அண்ணா திமுக இயக்கம். தோல்வியை படிக்கட்டுகளாக பயன்படுத்தி வெற்றிக்கனியை பறிப்பதுதான் அதிமுக தொண்டர்களின் பணியாக இருக்கின்றது என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கலாநிதி, மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், விருதுநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும் பொதுக்குழு உறுப்பினருமான எஸ்.என்.பாபுராஜ், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். கதிரவன், விருதுநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சேதுராமன், பிஆர்சி மண்டல செயலாளர் குருசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சியார்பட்டி முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளர் தெய்வம், மீனவரணி மாவட்ட செயலாளர் ரெங்கபாளையம் காசிராஜன், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், வெங்கடேஷ், விருதுநகர் நகர கழக செயலாளர் KfkJnநயினார், tpUJefh; jfty; njhopy;El;g mzp efu nrayhsh; ghriw rutzd,; சிவகாசி நகரக் கழகச் செயலாளர் அசன்பதுருதீன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், ராஜபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், சேத்தூர் நகரக் கழகச் செயலாளர் பொன்ராஜ்பாண்டியன், ராஜபாளையம் நகர கழக செயலாளர் பரமசிவம், வக்கீல் முருகேசன், திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் சரவணகுமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கோவில்பிள்ளை, அம்மா பேரவை பிலிப்வாசு, ராஜபாளையம் ராமராஜா, வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராமராஜ்பாண்டியன், விஸ்வநத்தம் மணிகண்டன், வத்திராயிருப்பு மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் கணேசன், விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், சரவணன், மைக்கேல்ராஜ் , சிவகாசி நகர இனைஞரணி செயலாளர் கார்த்திக், அம்மா பேரவை செல்லப்பாண்டி மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக, ஒன்றிய கழக, நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *