



நீலகிரி மாவட்டம் உதகையில் கட்சியை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உதகை வந்திருந்தார்.
முன்னதாக இன்று குமரி ஆனந்தனின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும், 10 ஆண்டுகள் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இன்று நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி மக்களை ஏமாற்றி வருவதாகவும் போலியான நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், டாஸ்மாக் ஊழலை மறைக்கவே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதாக குற்றச்சாட்டினார். தக்க சமயத்தில் மக்கள் தகுந்த பாடம் விடுவார்கள் என தெரிவித்தார்.


ஏற்கனவே உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாரதப் பிரதமர் துவக்கி வைத்த நிலையில், பாம்பன் பாலம் பிரதமர் மோடிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து தமிழ்நாட்டிற்கு 8300 கோடி ரூபாய் திட்டங்களை பாரத பிரதமர் அறிவித்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை புறக்கணிக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கும் நாடகத்தை நடத்தியதாகவும், துரோக செயலில் ஈடுபட்டதால் தமிழக மக்களிடையே பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

