


இந்திய வரலாற்றில் அனைத்து மாநில அரசுகளும் மகிழ்ச்சி அடையும் வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பான அறிவிப்பினை ஆளுநர் ரவி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இதைத் தொடர்ந்து சுற்றுலா நகரமான உதகையில் நகர திமுக சார்பில், நகரச் செயலாளர் ஜார்ஜ் தலைமையில் நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளர் கே எம் ராஜு முன்னிலையில் உதகையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட அவை தலைவர் போஜன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், உதகை நகர மன்ற தலைவி வாணி ஸ்ரீ உட்பட திமுகவினர் பங்கேற்றனர் .


