கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் காவல் நிலைய எல்கைகுட்பட்ட பகுதியில் விபத்தில்லா சாலையை உருவாக்கிடவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் புதிய முயற்சியாக தானியங்கி வாகன பதிவு எண் கேமரா(Automatic Number Plate Recognition) இயக்கத்தினை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .E.T.சாம்சன், IPS., துவங்கி வைத்தார். இதன் மூலம் அந்த சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களின் பதிவு எண்கள் கண்காணிக்கப்படும். வாகனங்களை புகைப்படம் எடுத்து தானியங்கி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வாகனங்களை தானியங்கி கேமராக்கள் மூலம் தணிக்கை செய்தும் குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் உயர் தொழில்நுட்ப மூலம் கண்காணிக்கப்படும்.
கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
