• Wed. Apr 24th, 2024

ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி  அரசு மேல்நிலைப் பள்ளியில்.  83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள், உலகம் முழுவதிலும் இருந்து முதல் முறையாக ஒன்றிணைந்து சந்தித்துக் கொண்டனர். தாங்கள் படித்த பள்ளி அதில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்ய முடிவு செய்தனர்.
ஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி கிராமத்தில் உள்ள  அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இப்பள்ளியில் 1983 மற்றும் 84 ஆம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் பலர் மாநில மற்றும் மத்திய அரசு பணிகளிலும் ஆந்திரா கேரளா கர்நாடகா உட்பட இந்தியா முழுவதிலும் குறிப்பாக அமெரிக்கா சிங்கப்பூர் சவுதி அரேபியா போன்ற உலகில் பெரும்பாலான நாடுகளில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.தற்போது 50 முதல் 55 வயதை கடந்தும் தங்களது வாழ்க்கையில் மீன்சுருட்டி பள்ளியில் படித்த கல்வியே உயர்த்தியது, வெற்றியடைய செய்துள்ளது என்று பெருமைப்பட்டு 40 வருடங்களுக்கு முன் தங்களுடன் இணைந்து படித்த சிறு வயது நண்பர்களை காண பல வருடங்களாக ஏங்கிய நிலையில். 

தங்கள் கிராமத்திற்கு வரும்போது, நண்பர்களின் வீடுகளை தேடிச்சென்று அவர்களின் குடும்பத்தாரை சந்தித்து நண்பர்களின் முகவரி செல் நம்பரை பெற்று செல்போனில் தொடர்பை ஏற்படுத்தி கடந்த நான்கு வருடங்களாக சந்திக்க பல்வேறு வகையில் முயற்சி செய்தும் சந்திக்க முடியாத நிலையில். சவுதி அரேபியாவில் இருந்து பார்த்தி மலை ராஜ,சிங்கப்பூரிலிருந்து மணிவண்ணன், கேரளாவில் இருந்து சரவணன், சென்னையைச் சேர்ந்த கதிரவன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு,
ஒரு வழியாக பள்ளி திறந்த முதல் நாளில் பள்ளியிலேயே சந்தித்து தற்போதுள்ள ஆசிரியர்களை வாழ்த்தியும் படிக்கும் மாணவர்களிடம் தங்களது அனுபவங்கள் மற்றும் தாங்கள் குடும்பத்துடன் உயர்ந்த நிலைக்கு வர காரணம் போன்றவற்றை பகிர்ந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி உலகில் எங்கு மூலையில் இருந்தாலும், அங்கிருந்து பறந்தோடி வந்தனர். இந்தியா முழுவதிலும் இருந்து வந்து, மீன்சுருட்டியில் ஒன்று சேர்ந்தனர்.ஆனால் தமிழக அரசு விடுமுறையை தள்ளி வைத்ததால் பள்ளி மூடி இருப்பதைக் கண்டு பள்ளியின் வாசலில் ஒன்று சேர்ந்து, பள்ளி மூடி இருப்பதால், தாங்கள் படிக்கும் காலத்தில் விடுமுறையின் போது சந்தித்து விளையாடி பொழுதைக் கழித்த விவசாய நிலம் பம்பு செட் தோப்பு பகுதியில். ஒன்று சேர்ந்து கலந்துரையாட முடிவு செய்து அனைவரும், தோப்புப் பகுதிக்கு சென்று தாங்கள் படிக்கும் காலத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் தகவல்கள் ஆசிரியர்களிடம் அடி வாங்கியது, முட்டி போட்டது, பள்ளி மைதானத்தை  சுற்றி வந்து தண்டனை பெற்றது, போன்றவைகளை பகிர்ந்து கொண்டனர் காலை முதல் மாலை வரை பகிர்ந்து கொண்டு    பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தாங்கள் சந்தித்தவைகள் அனுபவங்கள் மேற்படித்தவைகள், தற்பொழுது மாநில மத்திய அரசு பணிகள், இந்தியாவில் எங்கெங்கெல்லாம் கம்பெனிகளில் வேலை செய்து வருகின்றனர். சுய தொழில் செய்து வருவது, வெளிநாடுகளில் தாங்கள் வேலை செய்வது, சுய தொழில் செய்வது, குடும்பத்தினர் பற்றி பகிர்ந்து கொண்டு ஒன்றாக ஒருவருக்கு ஒருவர் உணவை பரிமாறி  சாப்பிட்டு தொடர்ந்து அடுத்த முறை அனைவரும் நாம் படித்த பள்ளியிலேயே குடும்பத்துடன் ஒன்றிணைந்து சந்தித்துக் கொள்வது, ஆசிரியர்களை, மாணவர்களை சந்தித்து பள்ளிக்கு தேவையான உதவிகள் செய்வது, ஏழை எளிய மாணவர்கள் படித்து முடித்தவுடன் அவர்கள் விருப்பப்படி மேல்படிப்பை படிக்கச் உதவுவது என்று முடிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *