வேடசந்தூரில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
வேடசந்தூரில் கடைவீதி பகுதிக்கு நடந்து சென்று கடைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர்.

உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி.செல்வம், ஏ.ராகேஷ், ஏ.முத்துக்குமார், எஸ்.மாரிமுத்து, கிளை செயலாளர்கள்
எம்.கே.வேலுச்சாமி, டி.பி.முருகன், நாகராஜ், போக்குவரத்து இடைக்கமூட்டி உறுப்பினர், சி.நாகவேல், ஆர். அசோக்குமார்,மற்றும் மூத்த தோழர்கள் மூத்த தோழர்கள். நல்லுச்சாமி, ஆண்டியப்பன், ராஜலிங்கம், பொன்னையா, முருகேசன்,
சங்கப்பிள்ளை, சுப்பிரமணி, கிருஷ்ணன், சண்முகம், கிளை உறுப்பினர்கள் பாரதி, அருள்முருகன், மாணிக்கம், மணி, சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தனர்.




