• Mon. Apr 28th, 2025

அனைத்து கோவில்களிலும் கனி காணும் தரிசனம்..,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சியினை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோமாதா தரிசனம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இது போல், சுசீந்திரம் தானு மாலய சுவாமி திருக்கோவில், நாகர் கோயில் நாகராஜா கோவிலில், குமாரா புரம் முருகன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் போன்ற பல்வேறு கோயில்களில் சித்திரை விஷு கனி காணும் நிகழ்ச்சி, சிறப்பு பூஜைகள் நடந்தன.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் திரளாக பங்கேற்று அதிகாலையே கனி காணும் நிகழ்வில் பங்கேற்றார்கள்.