• Tue. Apr 22nd, 2025

திமுக அலுவலகத்தில் பொறியாளர் அணிகள் தேர்வு நேர்முகம்… நிர்வாகிகள்_நேர்காணல்..,

கன்னியாகுமரி மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குமரி கிழக்கு மாவட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் பேரூர் கழக பொறியாளர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் மேயர், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தலைமையில், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர், நெல்லை மண்டல பொறுப்பாளர் ராஜவர்மன், பொறியாளர் அணி பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணலை நடத்தினர். பின்பு வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ.மகேஷ் தேர்ந்தெடுக்கபடும் நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும், ஆலோசனையும் தெரிவித்தார். உடன் மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் ஜவஹர், ஜீவா, சேக் மீரான் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் Dr.சுரேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், பொறியாளர் அணி மாவட்ட நிர்வாகிகள் பழனி, தமிழன் ஜானி, வெங்கடேசன், பெனில், ராஜேஷ் ரத்தினமணி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.