• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிரான்ஸில் மீன் பிடிக்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Byவிஷா

Feb 23, 2023

பிரான்ஸில் மீன்பிடி வலையில் சிக்கிய வெடிகுண்டு ஒன்றை இளைஞன் ஒருவர் வீட்டுக்கு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அவரது வலையில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த வெடிகுண்டு ஒன்று சிக்கியுள்ளது. குறித்த நபர் உடனடியாக பொலிஸாரை அழைக்காமல், குறித்த வெடிகுண்டை நேராக தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு சென்றுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் போலிஸார் அழைக்கப்பட்டனர். குறித்த கட்டிடத்தில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் வெடிகுண்டு அங்கிருந்து செயலிழக்கப்பட்டு, வெடிகுண்டு எடுத்துச் செல்லப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் நிறைவுக்கு வந்தது. குறித்த இளைஞன் முதலில் கைது செய்யப்பட்டபோதும், பின்னர் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.