திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தண்டபாணி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் , மதுரை மத்திய சிறையில் உயிரிழந்தார்.

பக்கவாதம் மற்றும் நீரழிவு நோய் இருந்ததாக சிகிச்சையில் இருந்தவர் ஏற்பட்டதாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடலை கொண்டு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






