

ஓரியூர் செல்லும் சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்துடன் கடக்கின்றனர்.
திருவாடானையில் இருந்து ஓரியூர் செல்லும் சாலையில் தனியார் கேஸ் கம்பெனி ஏஜென்சி இவர்களது கம்பெனி வாகனத்தை சாலையின் இருபுறமும் நிறுத்துவதால் வாகன போக்குவரத்தில் சிக்கல் நீடிக்கிறது. சில நேரங்களில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் உள்ளது. பலமுறை இதுகுறித்து கூறியும் கேளாமல் வாகனங்களை நிறுத்துகின்றனர். அதனால் விபத்து அபாயம் உள்ளது. அதனால் இப்பகுதியில் மக்கள் சாலையை கடக்கும் பொழுது ஒருவித அச்சத்துடன் கடக்கின்றனர்.
