கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 1முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இன்று தொடங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவ, மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜீவானந்தம் தலைமையில் பள்ளி மாணவர்கள் 108 தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். பின்னர் தங்களது பள்ளி வகுப்பு அறைகளுக்கு சென்றனர். மகிழ்ச்சியுடன் மலர்களை தூவியும் பலூன்கள் கட்டியும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை வரவேற்றனர்.
திருச்சி மேலப்புதூர் அருகே தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கையில் அவருடைய பெயர்களை இதய வடிவில் வரவேற்பு கார்டுகளாக கட்டியும், பென்சில்கள் வழங்கியும் குழந்தைகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.