விலை வாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. நடைபெற்றவரும் நாடாளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். விவாதிக்க வலியுறுத்திய எம்பிக்கள் பலர் சஸ்பெண்ட செய்யப்பட்ட நிலையில் விலைவாசி உயர்வு குறித்து இன்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
சிவசேனாவின் வினாயக்ராவத்,காங்கிரசின் மணீஷ்திவாரி ஆகிய இரு எம்.பி.க்கள் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ்கொடுத்தனர். இது விதி 193இன் கீழ் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.