• Fri. Apr 19th, 2024

சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை…

Byகாயத்ரி

Aug 1, 2022

சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, அனைத்து புகையிலை பொருட்களின் பொதிகளிலும் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படுகிறது.

அமைச்சகத்தின் விதிப்படி, பேக்கிங் இருபுறமும் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள் மற்றும் படங்கள் பயன்படுத்தப்படும்: புகையிலை வலிமிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது என பேக்கிங் ஒரு பக்கத்தில் படத்துடன் பயன்படுத்தப்படும் மற்றும் புகையிலை பயனர்கள் வாழ்நாள் குறைவது போல மறுபுறம் படத்துடன் காட்சிக்கு வைக்கப்படும். இந்த பேக்குகளில், கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துருவில், க்விட் டுடே கால் டுடே (QUIT TODAY CALL TODAY)(1800-11-2356) என்ற கட்டணமில்லா ஹெல்ப்லைனும் இருக்கும். அரசாங்க தரவுகளின்படி, புகையிலை பயன்பாட்டினால் ஒவ்வொரு ஆண்டும் 1.3 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் ஏற்படுகின்றன. புகையிலை பயன்படுத்தாதவர்களுடன் ஒப்பிடுகையில், புகையிலை பயன்படுத்துபவர்களின் ஆயுள் 10 ஆண்டுகள் வரை குறைக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *