• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு பிரதமர் செயல்பட்டு வருகிறார்- ஆளுநர் ஆர்.என்.ரவி

ByA.Tamilselvan

May 6, 2022

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு பிரதமர் செயல்பட்டு வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய மீன்வள சங்கம் சார்பில் 12-வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம், சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றுவருகிறது..இந்த 3 நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பேசுகையில்
முந்தைய காலங்களில் ஒவ்வொரு முறையும் ஆட்சி புதிதாக அமையும்போது, புதுப்புது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நிதி ஒதுக்குவார்கள். அதற்காக ஓர் ஆண்டு செலவிடுவார்கள். ஆனால், ஆட்சியின் 4-ம் ஆண்டு வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு தேர்தல் குறித்து யோசிப்பார்கள். மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி, முதலில் இருந்து அதை மீண்டும் தொடங்குவார்கள்.தற்போது அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும், உலகின் நம்பர் 1 நாடாகமாற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அதைத்தான் பிரதமர் மோடி ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்று தெரிவிக்கிறார். 150 நாடுகளுக்கு நாம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறோம். இதுதான் புதிய இந்தியா. இவ்வாறு ஆளுநர் பேசினார்.
இதில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.