• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவது உறுதி – அமித் ஷா பேச்சு

ByA.Tamilselvan

May 6, 2022

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்துவது உறுதி , என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
மேற்கு வங்கத்துக்கு 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில், ஹிங்கால்கன்ஜ் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையின் ரோந்துப் படகுகள், படகு ஆம்புலன்ஸ் ஆகியவற்றை நேற்று தொடங்கி வைத்தார். பின்பு சிலிகுரியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படாது என திரிணமூல் காங்கிரஸ் கட்சி வதந்தி பரப்பி வருகிறது. கரோனா தொற்று முடிவடைந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும். . இதை திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியாது. இவ்வாறு அமித் ஷா பேசினார். .