• Sat. Oct 12th, 2024

ஒரு சிறுவனுக்காக ஒட்டு மொத்த பள்ளியே மொட்டை அடித்து நெகிழ வைத்துள்ளது…

Byகாயத்ரி

May 6, 2022

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பிரேடின் வாஸ்கோ(Breadyn wasko) என்ற சிறுவனுக்கு எலும்பு புற்றுநோய் வந்துள்ளது. அதனால் அந்த சிறுவன் அடுத்த இரண்டு மாதங்களில் உயிரிழந்த விடுவான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுவனின் தலையில் இருந்த முடி அனைத்தையும் எடுத்து மொட்டை அடித்து விட்டனர். இதையடுத்து சிறுவன் மறுநாள் பள்ளிக்கு அவன் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக, அவரது நண்பர்கள் மற்றும் அந்த சிறுவன் ஃபுட்பால் டீமில் இருந்த வீரர்கள் அனைவருமே தங்களது முடியை எடுத்து மொட்டை அடித்துக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஃபுட்பால் டீம் பயிற்சியாளர் என அனைவருமே மொட்டை அடித்துக்கொண்டனர்.

இதில் அந்த பள்ளியில் முதல்வர் ஒருபடி மேலே சென்று அந்த சிறுவனின் கையாலயே தனது முடியை எடுத்துக் கொண்டார். அந்த சிறுவனின் மகிழ்ச்சியை கண்டு பள்ளி முழுவதுமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இது அனைத்துமே முடிந்தபிறகு அந்த பள்ளி முழுவதும் சேர்ந்து சிறுவனின் மருத்துவ செலவிற்காக 7000 டாலர் நிதி திரட்டி கொடுத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் இன்னும் உலகில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மனித நேயமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு இந்த சம்பவமே எடுத்துக்காட்டு. ஒரு சிறுவனின் மகிழ்ச்சிக்காக ஒரு பள்ளி முழுவதுமே மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் காண்போரை நெகிழ வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *