• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டோட விலை ரூ.25,999… அடேயப்பா…..

Byகாயத்ரி

May 25, 2022

அன்றைய காலகட்டத்தில் கடைக்கு சென்றது அனைத்து பொருட்களையும் வாங்கி வருவார்கள். ஆனால் இன்று என்னவோ ஆர்டர் செய்த உடன் வீடு தேடி பொருட்கள் அனைத்தும் வருகின்றன. அதனால் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்யும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. அதற்கு பல சமூக வலைத்தளங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அமேசான் இணையதளத்தில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டின் விலை ரூ.25,999 என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை வாடிக்கையாளர் ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அமேசான் விளக்கம் அளித்துள்ளது. அதில் ரூ.259.99 என்று பதிவு செய்வதற்கு பதிலாக தவறாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக வருகிறது.