மதுரை மாவட்ட சட்டப்பணி ஆனை குழு உத்தரவுபடி வாடிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிக்குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் கட்டக்குளம் ஊராட்சி யில் நடந்தது.

இந்த முகாமில் சட்டப் பணி குழு வழக்கறிஞர் விஜயகுமார் பொது வள தகராறு,சமூக மற்றும் கலாச்சார தகராறு,பணம் மீட்டெடுப்பு தகராறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாக சுமூகமாகவும் தீர்வு காண்பதற்கு வாடிப்பட்டி வட்ட சட்டபணிக்குழுவைஅணுகலாம் என்றும் மேலும் பல்வேறு சட்டங்கள் பற்றி விளக்கி பேசினார். இதில் சட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதன் ஏற்பாடு களை சட்டப்பணி தன்னார்வலர்கள் பொன். பனகல் பொன்னையா, கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் சுந்தரி நன்றி கூறினார்.





