• Wed. Dec 11th, 2024

இந்தியாவை விட பாகிஸ்தான்,வங்களாதேசத்தில் பெட்ரோல் விலை குறைவு

ByA.Tamilselvan

May 25, 2022

பெட்ரோல் ,டீசல்,உள்ளிட்ட எரிபொருட்களின் விலை சமீபகாலமாக சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில்இந்தியாவிலும் தினசரிபெட்ரோல் விலை உயர்ந்துவந்தது.கடந்தசில நாட்களாக பெட்ரேல் விலை குறைந்துள்ளது.
விலைவாசி உயர்வு விஷயத்தில் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளை விட இந் தியா நல்ல நிலைமையிலேயே உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அண்மையில் பெருமை பேசியிருந்தனர்.
அதுமட்டுமன்றி, பெட்ரோல், டீசல் உற்பத்தி மீது ஏற்கெனவே உயர்த்திய பல மடங்கு கலால் வரியில் சிறிய அளவில் முறையே லிட்டருக்கு ரூ. 8, ரூ. 6 என குறைத்து விட்டு, ஏதோ அடி யோடு பெட்ரோல், டீசல் விலை யைக் குறைத்து விட்டதாகவும் பாஜக அமைச்சர்கள் தற்போது தம்பட்டம் அடித்துக் கொண்டி ருக்கின்றனர். ஆனால், இப்போதும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்க தேசத்தைக் காட்டிலும் இந்தியா வில் பெட்ரோல் விலை அதிக மாகவே இருப்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தலைநகரான தில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாய் 72 காசுகளுக்கு விற் கப்படுகிறது. இந்த விலையோடு ஒப்பிட்டால், நமது அண்டை நாடான பாகிஸ்தானில் ஒரு லிட் டர் பெட்ரோலின் விலை இப்போ தும் வெறும் 64 ரூபாயாகத்தான் உள்ளது. அதேபோல வங்க தேசத்தை எடுத்துக் கொண்டால், அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 79 ரூபாய்க்குத்தான் விற்கப்படு கிறது. இந்த இரு நாடுகளும் இந்தி யாவைக் காட்டிலும் சிறிய பொரு ளாதாரமாக இருந்தும் , மக்கள் மீது வரியைச் சுமத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.