• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் துணைவேந்தர்கள் மற்றும் நிதி பற்றாக்குறையால் பல்கலைக்கழகங்கள் ஸதம்பித்து நிற்கிறது.ஆர்.பி. உதயகுமார் கேள்வி..,

ByKalamegam Viswanathan

Oct 24, 2026

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், சமுதாய முன்னேற்றம், எல்லாவற்றுக்குமே கல்விதான் அடிப்படை என்பது நாம் எல்லோரும் அறிந்து ஒன்றுதான் அதனால் தான் காலம் காலமாக கல்விக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

ஆனால் தற்போது கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிற பல்கலைக்கழகங்கள் ஸம்பித்து இருக்கிறது நமக்கெல்லாம் ஒரு கவலை அளிப்பதோடு இளைய தலைமுறையினுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ள சூழ்நிலையை இந்த 5 மாத தவெக அரசு வேடிக்கை பார்த்து வருகிறதோ என்ற ஒரு எண்ணமும் தோன்றுகிறது .

தமிழகத்தில் உள்ள 21 அரசு பல்கலைக்கழகங்களில்,17 அரசு பல்கலைக்கழங்களில் நிரந்தர துணை வேந்தர்கள் இல்லை
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் தத்தளிக்கிறது .கோவை பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகங்களில் நான்கு ஆண்டுகளாக துணைவேந்தர்கள் இல்லை.

நோபல் பரிசுகளை பெற்றவர்களையும் ஏன் இந்திய நாட்டுக்கே பல ஜனாதிபதிகளையும் அப்துல் கலாம், ராதாகிருஷ்ணன் எல்லாம் உருவாக்கிய சென்னை பல்கலைக்கழகம் கடந்த மூன்று ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் முடங்கி கிடக்கிறது.

பல்கலைக்கழகங்கள் என்ன பணிகளை செய்கின்றார்கள் என்றால் பாடத்திட்டங்களையும் ,ஆராய்ச்சி திட்டங்களையும் அங்கீகரிப்பது, ஆசிரியர் நியமனம் சான்றிதழ்களை கையெழுத்துட்டு வழங்குவது இது போன்ற பல பணிகள் துணைவேந்தருக்கு பொறுப்புகள் உண்டு. துணைவேந்தர்கள் இல்லாத பல்கலைக்கழகங்கள் பெரும்பாலான நிர்வாக பணிகள் தற்போது ஸம்பித்து நிற்பது தான் நம்முடைய கவலையாக உள்ளது .இப்போது அதில் அரசு அக்கறை செலுத்தப்படுகிறதா இல்லையா என்று தெரியவில்லை

இதில் ஏன் பிரச்சனை ஏற்பட்டது என்றால்? துணைவேந்தர் தேர்தல் குழுவில் பல்கலைக்கழக மானிய குழுவில் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும் எனது ஆளுநர் முடிவை கடந்த கால திமுக அரசு ஏற்கவில்லை ஆளுநருக்கும், ஆட்சியாளர்களுக்கும் இருந்த ஈகோவால் பல்கலைக்கழகங்கள் செயல்பாடு தற்போது ஸம்பித்து நிற்கிறது

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றிக் கொண்டு வந்த பல்கலைக்கழகங்களில் சட்டத் திருத்தம் தொடர்பான வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை நிரந்தர துணைவேந்தர்களை நியமிக்க மாட்டோம் என்றும் உத்தரவாதம் வழங்கி இருக்கிறது கடந்த கால திமுக அரசு.

மேலும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியில் உள்ளது .ஒரு புறத்தில் துணைவேந்தர் இல்லை இன்னொரு புறத்தில் நிதி நெருக்கடி சிக்கி உள்ளன. குறிப்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அன்றாட செலவுக்கு தத்தளித்து கொண்டிருக்கிற காரணத்தினால், இந்த வைப்பு நிதி, ஓய்வூதிய சேமிப்பு நிதியை எல்லாம் செலவிடும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அதோடு பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட்ட 8,867 ஆசிரியர் பணியிடங்களில் 3571 இடங்கள் காலியாக இருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் மட்டும் 515 ஆசிரியர் பணியிடங்களில் 335 இடங்கள் காலியாக இருக்கிறது .1100 ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் 400 பேர்தான் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல எல்லா பல்கலைக்கழகங்களில் இது போன்று தான் நிலை வருகிறது..

தமிழகத்தில் 35 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர் கல்வி படித்து வருகிறார்கள் மத்திய அரசின் கணக்கெடுக்கின்படி உயர் கல்வி சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 52.3% முன்னிலை வகிக்கிறது. அம்மா,எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

இந்த நிலையிலே தான் தற்போது கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிற பல்கலைக்கழகங்கள் ஸ்தம்பித்து நிற்கக்கூடிய நிதி நெருக்கடியில் உள்ளது. துணைவேந்தர் காலி பணியிடங்களில், ஆசிரியர் காலி பணியிடங்கள்,ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள் இப்படி இருந்தால் நிர்வாகத்தை என்பது எப்படி நடத்த முடியும் .

பல்கலைக்கழகங்கள் மீண்டும் சீராக செயல்பட மாற்றத்தை தருவோம் என்று சொன்ன தவெக அரசு மேலும் ஆளுநரோடு அமர்ந்து பேசி நீதிமன்ற தடைகளை எல்லாம் கலைந்து உடனடியாக துணைவேந்தர்கள் காலி பணியிடங்களை நிரப்புவார்களா?

இதன் மூலம் கோடிக்கணக்கான வருங்கால தலைமுறைகளை மாணவர்களின் எதிர்காலத்தையும், பல்கலைக்கழகங்களில் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?

இல்லை எப்போதும் போல போதை பொருள் நடமாட்டம், அறிவிக்கப்படாத மின்சார வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி, குழந்தைகள் பாதுகாப்பு கேள்வி குறி, அதேபோல விலைவாசி உயர்வு இந்த பிரச்சனை எல்லாம் இன்றைக்கு தமிழ்நாட்டில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இது குறித்து முதல்வர் சரிப்படுத்துவோம் என்றோ, அல்லது சீர்படுத்துவோம் என்றோ, அல்லது சரியாகிவிடும் என்றோ, ஒரு நம்பிக்கை ஏற்படுகின்ற வகையில், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் இதுவரை எந்த விளக்கமும் அரசிடமிருந்து, முதல்வரிடம் இருந்து வெளிவரவில்லை என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருக்கிறது.

ஆகவே எப்போதும் போல பிரச்சனைகளுக்கு மௌனமே பதிலாக தந்து கொண்டிருக்கிற முதல்வர் விஜய் , இதிலும் மௌனத்தை பதிலாக தந்து விட்டு கடந்து சென்று விடுவாரா இல்லை, உடனடியாக தலையிட்டு இளைய சமுதாயத்தின் மீது அக்கறை வைத்து கல்வியை பாதுகாக்க அக்கறையோடு அதிரடியாக அரசாணை வெளியிடுவாரா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இளைய சமுதாயம் எதிர்காலத்தில் இந்த நாட்டை வழிநடத்த கூடியவர்கள். ஆகவே அந்த இளைய சமுதாயத்தின் வாழ்வில் விளக்கேற்றி வைக்கின்ற கல்வியை அக்கறையோடு அணுகுமா தவெக அரசு, இல்லை எப்போதும் போல மவுனத்தோடு கடந்து செல்லுமா தவெக அரசு என கேள்வி எழுப்பி உள்ளார்.