மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி மந்தை பகுதி யில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் அதை அகற்றாத பேரூராட்சி செயல் அலுவலரை கண்டித்து மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல், வருவாய் ஆய்வாளர் கௌதம் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக்,மணிவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.





