


சென்னையில் நேற்று ஒரு கிலோ 90ரூபாய்க்கு விற்ற தக்காளியின் விலை, இன்று கிலோவுக்கு 35ரூபாய் குறைந்துள்ளதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். சில்லறை விற்பனை நிலையங்களில் இன்று ஒரு கிலோ தக்காளி விலை 65ரூபாய் முதல் 70ரூபாய் வரையும், பண்ணை பசுமை அங்காடிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.63க்கும், சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.55க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

