• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா!

BySeenu

Oct 24, 2026

கோவை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் 26-வது பட்டமளிப்பு விழா, இன்று (அக்டோபர் 23) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கல்லூரி வளாகத்தில் உள்ள என்.ஜி.பி. கலையரங்கில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி விழாவிற்குத் தலைமை தாங்கினார். ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் குமார் மொலுகரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பட்டம் பெறும் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.

விழாவில், டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மருத்துவர் அருண் என். பழனிசாமி, அறக்கட்டளையின் செயலர் மதுரா வி. பழனிசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அறக்கட்டளையின் முதன்மைச் செயலர் முனைவர் ஓ.டி. புவனேஸ்வரன், துணைச் செயல் அலுவலர் முனைவர் மா. நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. சரவணன் பட்டமளிப்பு விழாப் பேருரையாற்றினார்.

இந்தப் பட்டமளிப்பு விழாவில், இளங்கலைப் பிரிவில் 2,044 மாணவர்களும், முதுகலைப் பிரிவில் 280 மாணவர்களும் என மொத்தம் 2,324 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். இதில், இளங்கலைப் பிரிவில் 60 மாணவர்களும், முதுகலைப் பிரிவில் 31 மாணவர்களும் கல்வியில் சிறப்பிடம் பெற்றனர். மேலும், 10 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுச் சாதனை படைத்தனர்.

பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் பட்டத்திற்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.