• Sat. Oct 24th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் புத்தொழில் முனைவோர் சந்திப்பு!

ByK Kaliraj

Oct 24, 2026

சிவகாசி: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) மற்றும் சிவகாசி நாயகி இன்குபேஷன் மையம் இணைந்து நடத்திய சிவகாசி புத்தொழில் முனைவோர் சந்திப்பு, சிவகாசி ஜேகாம் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 60-க்கும் மேற்பட்ட புத்தொழில் முனைவோர், கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் கலந்து கொண்டனர். ரங்கநாயகி வரதராஜன் கல்லூரியைச் சேர்ந்த பிருந்தா ராகவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மதுரை வட்டார ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நிகழ்வில் பங்கேற்றார்.

இச்சந்திப்பின் முக்கிய நோக்கம், விருதுநகர் மாவட்டத்தில் புத்தொழில் மற்றும் புத்தாக்கச் சூழலை வலுப்படுத்துவதுடன், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதாகும். மேலும், மாணவர்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்முனைவோர்களிடையே தொழில்முனைவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், புத்தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குதல், தொழில்முனைவோருக்கிடையே தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்க முயற்சிகளை ஊக்குவித்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் புதிய சிந்தனைகளைத் தொழில்முனைவு முயற்சிகளாக மாற்றுவதற்கும், உள்ளூர் தொழில்முனைவோருக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இதுபோன்ற சந்திப்புகள் முக்கியப் பங்காற்றும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வு, விருதுநகர் மாவட்டத்தில் புத்தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், மாணவர்கள், தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க அமைப்புகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கிய முயற்சியாக அமைந்தது.