திருச்சியில் இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் பல மாதங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளியான துரைசாமியை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது சகோதரர் சோமுவையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த நிலையில், திருச்சியில் குழுமாயி அம்மன் கோயில் அருகே வேனை ஒட்டி வந்த காவலரை, சோமு, துரைசாமி சாதுரியமாக அவரது கழுத்தை நெரித்துள்ளனர். இதனால் வேன் நிலைதடுமாறிய நிலையில், குற்றவாளிகள் இருவரும் தப்பியோட முயற்சித்ததோடு, காவலர் சிற்றரசையும் அரிவாளால் வெட்டி உள்ளனர்.
இதனையடுத்து, குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன், சோமு, துரைசாமி ஆகிய இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச் நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த துரை மற்றும் சோமு ஆகிய இருவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காவலர் சிற்றரசும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த துரைசாமி மீது கொலை, கொள்ளை வழக்குகளில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.