• Fri. Apr 26th, 2024

தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து பேசி வருகிறார் – கி.வீரமணி பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமி தன் நிலை மறந்து முதல்வரை அவதூறு ஆக பேசி வருகிறார் என கி.வீரமணி சேலத்தில் பேட்டி….
திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், சாதி சங்கத்தினரால் சொந்தம் கொண்டாடப்பட்ட பெரியார் தொடங்கிய சேலம் சுயமரியாதை சங்க கட்டடம் பல ஆண்டுகளுக்குப் பிறகு சட்டரீதியாக மீட்கப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். பதிவுத்துறை ஐஜி மற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிட கழகத்திற்கு சாதகமான தீர்ப்பு கடந்த 31 ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இனி அந்தக் கட்டடத்தில் பொதுமக்களுக்கான வாசகர் சாலையில் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொருத்தவரை திமுக கூட்டணியின் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது . அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தன்நிலை தாண்டி முதலமைச்சரை தரம் தாழ்ந்து பேசியது இதற்கு முக்கிய காரணமாக உள்ளதாகவும் பழனிசாமியின் இந்த பேச்சு திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றியை தரும் என்றும் தெரிவித்த வீரமணி தேர்தல் நேரத்தில் கொள்கைகளையும் கருத்துகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமே தவிர இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது வெற்றி தோல்வியை விட கட்சி உறுதியாக உள்ளதா என்பதே முக்கியம் என்றும் பாஜகவின் கைங்கரியத்தால் அதிமுக நான்கு அணிகளாக பிரிந்து கிடப்பதாகவும் தாய் கலகம் என்ற அடிப்படையில் அதிமுகவினரை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டியது எங்கள் கடமை என்றும் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணியினர் வாக்காளர்களை அடைத்து வைக்கவில்லை என்றும் தேர்தல் பணி குறித்த வழிகாட்டுதலுக்காக பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டது என்றும் வீரமணி விளக்கம் அளித்தார். தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய வீரமணி வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்
டெல்லியில் ஏவிபி அமைப்பைச் சார்ந்தவர்கள் தமிழக மாணவர்களை தாக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வீரமணி தமிழகத்தில் வட இந்தியர்களின் வருகை அதிகரிப்பால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து விட்டதாகவும் இதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *