தமிழ்நாடு முழுவதும் வெயிலின் கோரதாண்டவத்தால் மக்கள் அல்லல்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் நாட்டு மக்களோ கடும் வெப்பத்தில் இருந்து தப்பித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
ஸ்பெயினில் பெய்து வரும் பனிமலையால் கடும் வெப்பத்திலிருந்து மக்கள் தப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு கோடை காலத்தில் வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக பதிவானது. இதனால் அங்கு பல இடங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்த நிலையில் பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பே அங்கு பனி மழை பொழிய தொடங்கியுள்ளது. மலைப்பகுதிகள், வீடுகள் மற்றும் சாலைகளில் பனி படலம் மூடி உள்ளன. இதனிடையே கடும் வெப்பத்திலிருந்து தப்பித்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.