வோடபோன் நிறுவனத்தில் செயல்திறன் போதுமானதாக இல்லாததால், 11ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம்.
உலகம் முழுவதும் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன. இதனால் ஊழியர்கள் மத்தியிலும் சற்று கலக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்கெரிதா டெல்லா, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “எங்களின் வோடபோன் நிறுவனம் வரும் 3 ஆண்டுகளில் செயல்திறன் போதுமானதாக இல்லை. நிறுவனத்தை எளிமைப்படுத்தவும், வளர்ச்சி பாதை கொண்டு செல்லவும் முக்கியத்துவம் வழங்கப்படும். இதற்கு தடையாக உள்ள சிக்கல்கள் அகற்றப்படும்” என்று கூறியுள்ளார்.