பித்தளை பானை , அண்டா தயாரிப்பாளர்கள் விற்பனையின்றி மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை – பழங்கால உபயோகப் பொருட்களை மறந்ததாலும் , தற்போது பிளாஸ்டிக், சில்வர் உள்ளிட்ட பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதன் எதிரொலி.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் பகுதிகளில், கடந்த 30 ஆண்டுகளாக இருபதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் பித்தளை பாத்திரங்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர் . இவர்கள் நாளடைவில், கொஞ்சம், கொஞ்சமாக மாற்றுத் தொழிலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இரண்டு குடும்பங்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருவது மிகவும் வேதனைக்குரியதாகும்.
நாகரீக உலகில் பழமையை மறந்து, தற்போது பிளாஸ்டிக் மற்றும் சில்வர் குடங்களில் தண்ணீர் சேமித்து வைப்பதும், பித்தளை குடங்களை அறவே மறந்து தற்போது நோய் பரவக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், பித்தளை பொருட்கள் தயாரிப்பதில், தயாரிப்பாளர்கள் வேலை இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பித்தளை மற்றும் வெண்கல பாத்திரங்களில் குடிநீர் சேமித்து வைத்து அருந்தினால், குடிநீரில் சுவையே சுவைதான் . மேலும் பித்தளை பாத்திரங்கள் அதிக பணம் கொடுத்து வாங்கினாலும், நீண்ட நெடுநாள் பல வருடங்களாக அதன் தன்மை உழைப்பு நீடிக்கும் எனவும்,
திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பொதுமக்கள் தங்களுடைய சீர்வரிசை பாத்திரங்களுக்காக, ஒரு சில பித்தளை பாத்திரங்களை மட்டும் வாங்கிச் செல்வதால், தங்களுக்கு குறுகிய காலத்தில் மட்டும் வேலை கிடைக்கிறது, அதனால் போதிய வருமானம் கிடைக்காமல் தவிப்பதாகவும், ஆனால், பிளாஸ்டிக் மற்றும் சில்வர் பாத்திரங்களில் குடிநீரை பருகினால் நோய் தொற்று தான் உருவாகும் என கூறும் பித்தளை தயாரிப்பாளர்கள்,
அரசு தங்களுக்கு நிதி உதவி அளித்து பித்தளை பாத்திரங்கள் தயாரிக்கும் குடும்பங்களை காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்…