• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு வாலிபர்கள் கைது..,

BySeenu

Aug 10, 2026

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள T.ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்.

பெங்களூருவில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்

இறந்த மணிகண்டன் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,

வாடிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் கொலையில் ஈடுபட்டது அருண்பிரபு, திணேஷ் கண்ணன் என தெரியவந்தது

இறந்த மணிகண்டனுக்கும் இவர்களுக்கும் மது அருந்துவது தொடர்பாக வாக்குவாதம் முற்றி தகராறாக மாறிய ஆத்திரத்தில் மணிகண்டனை அருண் பிரபு, தினேஷ் கண்ணன் ஆகிய இருவரும் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடியதும் போலீசார் தேடுவதையறிந்து இருவரும் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் சரண்டர் ஆனதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.