• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்கு செலுத்திய மூதாட்டி

ஜெயங்கொண்டத்தில் ஆம்புலன்சில் வந்து படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறு மூதாட்டி ஓட்டளித்துள்ளார்

ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு தேர்தலில். மூதாட்டி தவமணி (85)
வயது முதிர்ச்சி காரணமாக படுத்த படுக்கையாக உள்ள நிலையிலும், ஆம்புலன்சில் ஓட்டளிக்க அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் சுமதி ஸ்கெட்ச் சேரில் இருந்த மூதாட்டியிடம் கோப்பில் கை நாட்டை பெற்றுக்கொண்டு, மூதாட்டியின் விரலில் மை வைத்து, மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் அருகே அழைத்துச் சென்றபோது, ஸ்ட்ரெச்சர் மின்னணு வாக்கு இயந்திரம் அருகே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து தேர்தல் அலுவலர் சுமதி மின்னணு இயந்திரம் டேபிளை நகர்த்தி மூதாட்டி இயந்திரம் அருகே சென்ற போதும் அவரால் இயந்திரத்துக்கான அளித்த சிரமப்பட்டார் இதையடுத்து தேர்தல் அலுவலர் சுமதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை சார்ஜரில் படித்திருந்த மூதாட்டியிடம் கொடுத்ததைத் தொடர்ந்து மூதாட்டி பட்டனை அழுத்தி சிரித்த முகத்துடன் சந்தோசமாக தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி திரும்பவும் ஆம்புலன்ஸில்  வீட்டிற்குச் சென்றார்.