பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசு போக்குவரத்து கழக பென்ஷனர் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்துக் கழக பென்ஷனர் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் 2015ம் ஆண்டு முதல் முதல் 2021 வரையிலான அகவிலைப்படி மற்றும் நிலுவைத்தொகையினை அனைத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கிட வேண்டும், அரசு போக்குவரத்து கழக ஒய்வூதியர்களுக்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏப்ரல், 2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஒய்வூதியம் திட்டம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.