பூத்துக் குலுங்கும் குறிஞ்சிச் செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. . நீலகிரி அமைந்துள்ள மலைப்பிரதேசமான மேற்குதொடர்ச்சிமலைகள். உலகின் பழைமையான மலை தொடக்களில் ஒன்று.அதாவது இமயமலையை விட வயதில் மூத்தது.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு மலைத்தொடராகும். மலைகளின் தோற்றமும்,பூத்துக்குழுங்கும் மலர்கள்,பசமைபோர்த்திய மலை தொடர்கள்,குளிச்சியான கால நிலை இவற்றால் மலைகளின் ராணி என அழைக்கப்படுகிறது. இம்மாவட்டத் தலைநகர் ஊட்டி என்றழைக்கப்படும் உதகமண்டலம் ஆகும். இம்மலையின் உயரமான சிகரம் தொட்டபெட்டா ஆகும்.தொட்டபெட்டா மலையானது கடல் மட்டத்திலிருந்து 2,637 மீட்டர் (8,650 அடி) உயரத்தில் உள்ளது. கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கில் கோயம்புத்தூர் மாவட்டம், கேரள மாநிலம் மற்றும் கர்நாடகா மாநிலம் என விரிந்து பரந்தது இந்த மலை.
நீலகிரி மாவட்டம் அனைத்து பகுதிகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகளுக்குக் கொண்டாடப்படும் கோடை வாசஸ்தலமாகும்
நீலகிரி மலையின் அடிவாரமான மேட்டுப்பாளையத்தையும் ஊட்டியையும் நீலகிரி மலை இரயில் பாதை இணைக்கிறது.நீலகிரியின் பரந்த பசுமையான இடங்களை பார்த்து ரசித்துக் கொண்டே மக்கள் மலைரயிலில் பயணிக்கலாம்.யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமான நீலகிரி மலை ரயில் பாதை (Nilgiri Mountain Railway) மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் (ஊட்டி) வரை நீண்டுள்ளது.
இம்மலையில் சோலைக்காடுகள், நீலகிரி வரையாடுகளின் வாழ்விடங்கள் உள்ளன. அமைதிப்பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா என பல முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வாழ்விடங்கள் அமைந்துள்ளது. நீலகிரி மலை அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையானது.புதியவகை விலங்குகள்,பறவைகள் பரிணாமம் அடைகூடிய இடமாகும்.இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகமாகும். இம் மலைத்தொடரில் 2,700க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள், பூக்காத தாவரங்கள்,உலகின் வேறு எங்கும் இல்லாத தேன் கரடி, நாற்கொம்பு மான் , கரும்வெருகு, உள்ளிட்ட விலங்குகளின் வாழிடமாக திகழ்கிறது
நீலகிரி மலைகளின் உயரமான பகுதிகளில் தொல்பழங்காலங்களிலிருந்து மக்கள் வசித்து வருகின்றனர். இது அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான தொல்பொருட்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் இனமக்கள் பாலஸ்தீனம் பகுதியிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்ற.
இம்மலைத்தொடரில் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கன்னட கல்வெட்டுடன் கூடிய ஒரு நடுகலானது நீலகிரி மாவட்டத்தில் வாழைத்தோட்டம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கபட்டது
1820 களின் முற்பகுதியில், நீலகிரி மலைத்தொடரில் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டது ஆங்கிலேயர்களுக்கு இது ஒரு பிரபலமான கோடைக் கால மற்றும் வார இறுதி பயணம் மேற்கொள்ளும் இடமாக ஆனது. 1827 ஆம் ஆண்டில் , சென்னை மாகாணத்தின் கோடைகால தலைநகராகவும் ஆனது. பல வலைவுகள் கொண்ட மலை சாலைகள் போடப்பட்டன. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாளிகையில் தான் தற்போதைய அளுநர்களின் மாளிகையான ராஜ்பவன் செயல்படுகிறது.
பல முக்கியதுவம் கொண்ட நீலகிரி வருடந்தோறும் வெளிநாட்டு,இந்திய அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாகும்.
இந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா அம்சம் தாவரவியல் பூங்கா ஆகும். தவிர பேருந்து நிலையம் அருகே படகு இல்லம், ரோஜா பூங்கா, மான் பூங்கா, தொட்டபெட்டா சிகரம் உதகமண்டலத்தில். சிம்ஸ் பூங்கா, மேய்ச்சல் நிறுவனம், கட்டேரி நீர்வீழ்ச்சி, ஆட்டுக்குட்டியின் பாறை மற்றும் டால்பின் மூக்கு,குன்னூரில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்கள். கோத்தகிரி தொகுதியில் கொடநாடு, காட்சி முனை மற்றும் செயின்ட் கேத்தரின் நீர்வீழ்ச்சி இரண்டு முக்கிய சுற்றுலாத்தலங்களாகும். கூடலூரில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலம் முதுமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் தெப்பக்காடு யானைகள் முகாம் உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள்உள்ளன..
நீலகிரி மலையில் குளிச்சி உடலுக்குமட்டுமல்ல மனதிற்கும் குளிச்சியை தருகிறது.