
நீலகிரி மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்குள் சிறுத்தைப்புலி ஒன்று ஹாயாக நடந்து சென்றது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலைமாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் குடியிருப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் நுழைந்த ஏழு வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைபுலி ஒன்று ஆட்சியர் குடியிருப்பு நுழைவாயிலில் புகுந்த சிறுத்தைபுலி ஒய்யாரமாக நடந்து சென்றது. மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு வாசலில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அந்த சிறுத்தை புலி பின்னர் மீண்டும் பின்வாசல் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இந்த காட்சிகள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
